கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரின் மனைவி ஷர்மிளா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது வீட்டிற்கு அமைச்சர் வெங்கட்ராமன் நேரில் ஆறுதல்.
தமிழக வெற்றி கழகத்தின் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார். இவரது மனைவி ஷர்மிளா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரின் வீட்டிற்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கட்ராமன் நேரில் வந்து அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தாருடன் பேசி ஆறுதல் கூறினார். இதை அடுத்து பேசிய அமைச்சர். மனைவியின் இறப்பு என்பது அனைத்து குடும்பங்களும் பேரிழப்பு. அதை தாங்கும் சத்தியம் தைரியத்தையும் இறைவன் அவருக்கு அவரது குடும்பத்தாருக்கும் வழங்க வேண்டும். எப்பொழுதும் தமிழக வெற்றிக்கழகமும் நாங்களும் அவருக்கு உறுதுணையாக இருப்போம் என பேட்டியில் தெரிவித்தார்.













