பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி 300க்கும் மேற்பட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
திருவாரூர் மாவட்டத்தில் இடிந்த நிலையில் உள்ள வலங்கைமான், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க கோரியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிப்ட் வசதி செய்து தரக்கோரியும், வாகனங்கள் திருடு போவதை தடுக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே செல்லும் பாதை பூட்டப்பட்டிருப்பதை திறக்க வேண்டும், பெண் ஊழியர்களுக்கு தனி அறை அமைத்து தர வேண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் வசந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

















