சீர்காழி அருகே பூம்புகார் சுற்றுலா தளத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாபெரும் தூய்மை பணி முகம். அனைத்து துறை பணியாளர்கள் கல்லூரி மாணவ மாணவிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரும் தூய்மை பணியில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் கடற்கரையில் மாபெரும் தூய்மை முகாம் பணி நடைபெற்றது .முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று மாபெரும் தூய்மை பணி முகாமை துவக்கி வைத்தார்.தொடர்ந்து சுற்றுலா வளாகம், கடற்கரை பகுதி, நெடுங்கல் தூண் வளாகம், கண்ணக சிலை வளாகம், சிறுவர் பூங்கா, சிலப்பதிகார கலைக்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொண்டார்.மாவட்டம் முழுவதும் இருந்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம், கல்வித்துறை, வனத்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணியை சுற்றுலா வளாகத்தில் மேற்கொண்டனர். தூய்மை பணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியரும் அனைவருடனும் இணைந்து இரண்டு மணி நேரம் வரை சுற்றுலா வளாகப் பகுதியில் தூய்மை பணியை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுற்றுலா வளாகத்தின் ஒரு பகுதியில் பனை விதைகள் நடவு செய்யும் திட்டம் துவக்கப்பட்டது .மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பனை விதைகளை நடவு செய்து பணியினை துவக்கி வைத்தார்.













