அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தின் முடிவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அகில இந்திய துணைத்தலைவர் சாமுவேல் ராஜ் பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தங்குடியில் நேற்று காதல் ஜோடி தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிபிஎம், விசிக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அகில இந்திய துணைத் தலைவர் சாமுவேல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:
பிரேத பரிசோதனை அறிக்கை முடிவின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்வதா? அல்லது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்வதா? என்பது குறித்து முடிவு செய்து வழக்கு பதிவு செய்வது என அமைதி பேச்சு வார்த்தை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உடற்கூராய்வு முடிவுக்கு பின்னரும் போலீசார் உரிய வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் உடலை பெற மாட்டோம்.
அப்பகுதியில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும், பிசிஆர் வழக்கில் மேலும் இருவரை சேர்க்க வேண்டும், குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பேட்டி.














