திருத்துறைப்பூண்டி அருகே பள்ளியில் இருந்த நிகழாண்டு பள்ளி பாடப் புத்தகங்களை இரும்பு வியாபாரியிடம் விற்பனை செய்த அரசு பள்ளி ஆசிரியர். பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு .
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியில், ஜானகி அண்ணி அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது, இதில் ஆலத்தம்பாடி ,பொன்னிறை, கச்சனம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ ,மாணவிகள் பயின்று வருகின்றனர்
இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று, இந்த பள்ளியில்பணிபுரியும் ஆசிரியர் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிகழாண்டு பாட புத்தகங்கள் மற்றும் சென்ற ஆண்டு பாடபுத்தகம் ,மீதமுள்ள நோட்டு புத்தகங்கள், சைக்கிள், உதிரிபாகங்கள் சீருடை, காலணி உள்ளிட்டவைகளை சாக்குகளில் கட்டி, இரும்பு வியாபாரியிடம் எடைக்கு கொடுத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டு ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
தொடர்ந்து ஆலிவலம் காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய பாட புத்தகங்களை இரும்பு வியாபாரியிடம் விற்பனைக்கு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்
அனைத்து பாட புத்தகங்களும் நிகழாண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப்புத்தகங்கள் என்பதால், பொதுமக்கள் இதனை ஏன் மாணவர்களுக்கு வழங்காமல் எடைக்கு போட்டு விற்பனை செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர் இதனால் ஆலத்தம்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த செயலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கேட்டபோது. …
பள்ளியில் பழைய புத்தகங்கள் மற்றும் பொருட்களை வகுப்பறைகளில் வைத்திருப்பதால் அதனை விற்பனை செய்து அரசின் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என உத்தரவின் பெயரில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இன்று பள்ளியில் உள்ள பழைய புத்தகங்கள் மட்டும் பொருட்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதில் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக தனிநபர் ஒருவர் இந்த ஆண்டு புத்தகத்தையும் எடுத்து அவதூறு பரப்பியுள்ளார் .
எனவே அவர் மீது பள்ளி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
















