கன்னியாகுமரி மாவட்டம் இரண்டாவது சிவாலயமான ரிஷபராசி பரிகார ஸ்தலமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்க சுவர் பணி நிறுத்தப்பட்டு இருப்பதால் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு உடனடியாக பணிகள் துவங்க அதிகாரிகளுக்கு உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவால ஓட்ட புனித யாத்திரை நடக்கும் 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான ரிஷபராசி பரிகார ஸ்தலமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் தாமிரபரணி ஆற்றில் கரையில் அமைந்துள்ளது தாமிரபரணி ஆற்றில் பல ஆண்டுகளாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக காம்போடு சுவரோடு சேர்ந்து இருந்த மண் திட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அடித்து செல்லப்பட்டது இதனால் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் பக்தர்கள் சார்பில் பக்க சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர் இந்த நிலையில் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்
திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு , அமைச்சர் மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கோயில் நேரில் ஆய்வு செய்து பக்க சுவர் கட்ட கோயில் நிதியில் இருந்து 84 லட்சம் ரூபாய் பொதுபணிதுறைக்கு ஒதுக்கீடு செய்த ஒராண்டு கடந்து அன்றைய அமைச்சர் மனோ தங்கராஜ் பணிகளை துவங்கி வைத்தார் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பக்தர்கள் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில் பக்க சுவர் கட்ட ஃபண்ட் அமைக்க கோயில் படிதுறை வழியாக பாதை அமைக்க மன நான்கு நாட்கள் மண் கொட்டபட்டது தொடர்ந்து அந்த பணிகள் நிறுத்தப்பட்டது இதனால் பக்தர்கள் கோயில் படித்துறை வழியாக புனித நீராட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது இது போன்று பல கோயில் ஊர்வலங்கள் இந்த படித்துறையில் வந்து சாமி விக்கிரகங்களுக்கு ஆறாட்டு நடைபெற்று வந்தது தற்போது இந்த ஆஜார ரீதியாக நிகழ்வுகளும் தடைபட்டு உள்ளதோடு பக்க சுவர் கட்டாததால் கோயில் காம்போடு சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் அந்தரத்தில் தொங்குகிறது இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் இன்று திக்குறிச்சி மஹா தேவர் ஆலயத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது ஜீலை 15 தேதிக்குள் பணிகள் துவங்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் கனிமவள துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்













