திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளின் வெற்றியை திராவிட மாடல் நாயகனுக்கு சமர்ப்பிப்பதாக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உணர்ச்சிகர பேட்டி..
நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட 18,193 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சி சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட 12922 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சத்யா வெற்றி சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற வெற்றி உறுப்பினருமான பூண்டி. கலைவாணன், திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் பெறுவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றியும், இந்த வெற்றியை திராவிட மாடல் நாயகன் தளபதிக்கு சமர்ப்பிப்பதாக உணர்ச்சிகரமாக பேட்டி அளித்தார்.











