நித்திய பிரதோஷ ஸ்தலமாக
விளக்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சனி பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் வழிபாடு…
சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் இன்று நடைபெற்ற இவ்வாண்டின் முதல் சனிபிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் திரண்டு நந்தியன் பெருமானை வழிபட்டனர்.
இவ்வாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு தினசரி சாயங்காலம் 6 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையினை கண்டு வழிபட்டால் பிரதோஷ காலத்தில் இறைவனை வழிபடும்போது கிடைக்கும் பலனுக்கு நிகரானது. ஆதலால் இப்பூலகில் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தினை மட்டும்தான் நித்திய பிரதோஷ ஸ்தலம் என அழைக்கப்படும் தனி சிறப்புக்குரியது.
பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இவ்வாலயத்தில் இன்று நடைபெற்ற இவ்வாண்டின் முதல் சனி பிரதோஷ வழிபாட்டில் ஆலயத்தின் பிரதான பிரகாரத்தில் அருள்பாலிக்கும் பெரிய நந்தியன் பெருமானுக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவிய நிறுமனப்பொருட்களைக்கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வண்ணவண்ண மலர்களால் நந்தியன்பெருமான் அலங்கரிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனையும் தொடர்ந்து மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தியன் பெருமானை மனமுருக வழிபட்டதோடு, ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு நடைபெற்ற சாயரட்சை பூஜையிலும் கலந்துகொண்டு வழிபட்டனர்.

















