மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் பேரணியாக சென்று தலைமை அஞ்சலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் வழியாக பேரணியாக சென்று திருவாரூரில் அமைந்துள்ள தலைமை அஞ்சலகம் முன்பாக சிஐடியு மாநில செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் விரோத சட்டங்களை உருவாக்கியது, விவசாயிகளுக்கு எதிராக சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத செயல்பாடுகளில் மத்திய அரசு செயல்படுவதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அதன் பிறகு மத்திய அரசு கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள் இதன் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
















