August 12, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 125 அடி உயர ராஜராஜ சோழன் சிலையுடன் அமையுது அருங்காட்சியகம்!

by sowmiarajan
February 3, 2026
in News
A A
0
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 125 அடி உயர ராஜராஜ சோழன் சிலையுடன் அமையுது அருங்காட்சியகம்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

உலகப் புகழ்பெற்ற தஞ்சை மண்ணில் மாமன்னன் ராஜராஜ சோழனின் வீரத்தையும், அவரது ஒப்பற்ற ஆட்சி நிர்வாகத் திறனையும் வருங்காலத் தலைமுறையினர் போற்றும் வகையில், மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தற்போது மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்றப் பேரவையில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதியன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தஞ்சையில் சோழர்களுக்கென ஒரு பிரம்மாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, இதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டியது. ஆரம்பகட்டத்தில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் அருகேயுள்ள காலியிடம் உள்ளிட்ட ஐந்து இடங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் வந்து இந்த இடங்களைப் பார்வையிட்ட போதிலும், போதிய இடவசதி உள்ளிட்ட சில காரணங்களால் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிறிய காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாத இறுதியில் இந்த அருங்காட்சியகம் கட்டுவதற்கான டெண்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அப்போது முதலில் தேர்வு செய்யப்பட்ட 12 ஏக்கர் நிலம், சோழர் காலப் பெருமைகளை முழுமையாகச் சித்தரிக்கப் போதாது எனக் கருதப்பட்டதால், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 50 ஏக்கர் நிலம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 56.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த அருங்காட்சியகத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, 125 அடி உயரத்தில் மாமன்னன் ராஜராஜ சோழனின் பிரம்மாண்ட சிலை நிறுவப்பட உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேலின் ‘ஒற்றுமை சிலை’யைப் போன்றே, உலகத் தரத்துடன் இந்த ராஜராஜ சோழன் சிலை வடிவமைக்கப்பட உள்ளது வரலாற்று ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் சோழர் காலத்துச் சிற்பங்கள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் சோழர்களின் கடற்படை வலிமையை விளக்கும் கலைப்பொருட்கள் இடம்பெறவுள்ளன. விரைவில் இதற்கான பிரம்மாண்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள நிலையில், இந்த அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டால், அது தஞ்சாவூரின் சுற்றுலா மற்றும் வரலாற்றுச் சிறப்பினைப் புதிய உச்சிக்குக் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை. சோழர் குலத்தின் வீர வரலாற்றைச் சொல்லும் ஒரு கலைக் கூடமாக இது திகழப்போவது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

Tags: 125-Foot Statuecultural heritageMuseumRajaraja CholaThanjavur Tamil University
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வேடசந்தூர் அருகே விடிய விடிய கண்விழித்து ‘நிலா பெண்ணை’ வழிபட்ட கிராம மக்கள்!

Next Post

சமயபுரத்தில் பூச்சொரிதல் விழாவால் திமுக மாநாடு தேதி மாறுகிறதா? – முக்கிய முடிவை நோக்கி திருச்சி!

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

சமயபுரத்தில் பூச்சொரிதல் விழாவால் திமுக மாநாடு தேதி மாறுகிறதா? - முக்கிய முடிவை நோக்கி திருச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.