மழையையும் பொருட்படுத்தாமல் நெல் கொள்முதல் நிலைய பருவ கால பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…”அனைத்து நெல் கொள்முதல் நிலைய பருவ கால பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.. திருவாரூர் நாகை மாவட்டத்தில் அனைத்து நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் 2013 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியில் சேர்க்கப்பட்டு இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாத 200க்கும் மேற்பட்ட பருவ கால பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில்.. 2013 முதல் 2016 வரை உள்ள பருவகால பணியாளர்கள் பட்டியல் எழுத்தர்கள் உதவுபவர்கள் காவலர்கள் உள்ளிட்ட 1400 பணியாளர்களுக்கு விரைவில் பணி நிரந்தரம் செய்வதாக தஞ்சாவூரில் நடைபெற்ற முத்தரப்பு ஆலோசனை கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குனர் வாக்குறுதி அளித்து.. இதனால் வரை எந்தவித பணி ஆணையும் வழங்கப்படவில்லை காண எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.. எனவே வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.. அனைத்து பருவ கால பணியாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.. உள்ளிட்ட கோரிக்கையிலே வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. சங்கத்தின் மாநில செயலாளர் கோமகன், மாவட்டத் தலைவர் திருமுருகன் மாவட்ட செயலாளர் விஜயகுமார் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் கார்த்திகேயன உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் மழையையும் பொருட்படுத்தாமல் அனைத்து பருவ கால நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

















