September 29, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“அரசியல்வாதி விஜயுடன் மோதுங்கள் ; நடிகர் விஜயுடன் அல்ல” – மத்திய அரசுக்கு காங்கிரஸ் நிர்வாகி கடும் கண்டனம்

by Priscilla
January 8, 2026
in News
A A
0
“அரசியல்வாதி விஜயுடன் மோதுங்கள் ; நடிகர் விஜயுடன் அல்ல” – மத்திய அரசுக்கு காங்கிரஸ் நிர்வாகி கடும் கண்டனம்
0
SHARES
15
VIEWS
Share on FacebookTwitter

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவது குறித்து, மத்திய அரசின் அணுகுமுறையை தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. கலை மற்றும் பொழுதுபோக்கு துறைகள் அரசியல் கருவிகளாக மாற்றப்படக் கூடாது என தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர் வலியுறுத்தியுள்ளார்.

விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜன நாயகன்’ படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் 2025 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம், பின்னர் ஜனவரி 9 ஆம் தேதி வெளியீடு என மாற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி நீடித்து வருவதால், படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தங்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தள்ளிப்போனதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கிரிஸ் ஜோடங்கர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மத்திய அரசை நேரடியாகக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

Dear @PMOIndia @narendramodi Ji,

The controversy surrounding actor Vijay's film 'Jana Nayagan' has sparked concerns about the misuse of political power. While political disagreements are understandable, targeting an artist's work is unacceptable.

The people of Tamil Nadu will… pic.twitter.com/eOwnV7Vkm9

— Girish Chodankar (@girishgoaINC) January 8, 2026

அந்த பதிவில், “பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள தற்போதைய சூழல், அரசியல் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறதோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால் ஒரு கலைஞரின் படைப்பை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசியல் லாபத்திற்காக திரைப்படங்களை தணிக்கை செய்வதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். கலை மற்றும் பொழுதுபோக்கு துறைகள் அரசியல் மோதல்களின் கருவிகளாக மாறாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அதிகாரிகளுக்கு ஏற்படும் அழுத்தங்களால் ஒரு திரைப்படம் தாமதங்களை சந்திப்பது தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் நியாயமல்ல” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அரசியலை கலைத்துறையிலிருந்து விலக்கி வைத்து, படைப்பாற்றல் சுதந்திரத்தை மதிக்க வேண்டும். நீங்கள் எதிர்கொள்ள வேண்டியது அரசியல்வாதி விஜயை; நடிகர் விஜயை அல்ல. மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் ஒருபோதும் வேலை செய்யாது” என தனது பதிவில் கிரிஸ் ஜோடங்கர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Tags: ACTOR VIJAYcentral governmentgirish chodankarjananayaganPM MODItamil cinemasTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு… முதல்வர் தொடக்கம் !

Next Post

அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை – எடப்பாடி பழனிசாமி !

Related Posts

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026
Next Post
அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை – எடப்பாடி பழனிசாமி !

அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை – எடப்பாடி பழனிசாமி !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- 52,280 பறிமுதல்- 2,20,546 வரி வசூல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வாக்கு சேகரிப்பு

September 24, 2026
“கதை கேட்டவுடனேயே சிரிப்பை நிறுத்தவே முடியலை… ரிவால்வர் ரீட்டா ஒரு பக்கா டார்க் காமெடி!”

November 26, 2025
பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: துவங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’

May 7, 2025
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.