December 7, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆங்கிலேய கரிகாலன் : ‘இந்திய நீர்ப்பாசனத் தந்தை’ ஆர்தர் காட்டன் பிறந்த நாள் இன்று!

by Priscilla
May 15, 2025
in News
A A
0
ஆங்கிலேய கரிகாலன் : ‘இந்திய நீர்ப்பாசனத் தந்தை’ ஆர்தர் காட்டன் பிறந்த நாள் இன்று!
0
SHARES
9
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
இந்தியாவின் நீர்ப்பாசனத் துறையில் மறக்க முடியாத பங்களிப்பை செலுத்திய ஆங்கிலேய இன்ஜினியர் ஆர்தர் காட்டன், 1803-ஆம் ஆண்டு மே 15-ம் தேதி இங்கிலாந்தின் செஷைரில் பிறந்தார். 15-வது வயதிலேயே கிழக்கிந்திய கம்பெனியில் பொறியாளராகச் சேர்ந்த அவர், 1821-ஆம் ஆண்டு முதன்முறையாக மதராஸ் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியமர்ந்தார்.

பின்னர் தமிழ்நாட்டின் நீர்நிலைகளை பராமரித்து, பாசனத்துக்கான திட்டங்களை செயல்படுத்திய அவர், 1829-இல் காவிரி பாசனப் பகுதியின் தனிப்பட்ட பொறியாளராக நியமிக்கப்பட்டார். அப்போது காவிரியின் வெள்ளம்–வறட்சி சூழ்நிலையை கவனித்த அவர், சோழர்கள் காலத்தில் கரிகாலச் சோழன் கட்டிய கல்லணையின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்.

1830-இல் கல்லணையின் ஒரு பகுதியை பிரித்து மணல் போக்கிகளை உருவாக்கிய ஆர்தர் காட்டன், அதன் அடித்தளத்தைக் கண்டு வியப்புடன் “இதுவல்லவோ கிராண்ட் அணை!’ என்று தெரிவித்ததாக வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. தமிழர்களிடம் மணற்படுகையிலான அடித்தள கட்டுமான நுட்பத்தை கற்றுக்கொண்டதாகவும் அவர் எழுதியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கல்லணையின் மேற்பகுதியில் புதுப்பிப்பு பணிகள், திருச்சி முக்கொம்பில் மேலணை (1836), கீழணை (1840), வீராணம் ஏரி தொடர்பான நீர்பாசன திட்டங்களை உருவாக்கினார். இதன் மூலம் காவிரி நீர், விவசாயிகளின் வயல்களில் பாயத் தொடங்கியது. தமிழகம் பசுமை சூழ்ந்த தஞ்சை டெல்டாவாக மாறியது.

இந்த அனுபவங்களைத் தொடர்ந்து, ஆந்திராவில் கிருஷ்ணா (விஜயவாடா அருகே – 1849) மற்றும் கோதாவரி (தவளேஸ்வரம் அருகே – 1873) ஆறுகளில் அணைகள் கட்டினார். வானம் பார்த்த ஆந்திரா, முப்பொரு பயிர் விளையும் நிலமாக மாறியது. ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாசனத் திட்டங்களை மேற்கொண்டார். அவரது திட்டங்கள் மூலம் இந்தியாவில் 50 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி உருவானது.

மேலும், மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு அணை போன்ற திட்டங்களுக்கு துவக்கக் கருத்துக்களையும் முன்மொழிந்தவர் ஆர்தர் காட்டன். 1835-ஆம் ஆண்டிலேயே அவர் மேட்டூர் அணைக்காக மைசூருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று பேசப்படும் காவிரி-கங்கை இணைப்பு திட்டத்தையும் முதல் முறையாக முன்வைத்தவர் இவர்தான்.

இந்திய நீர்ப்பாசனத் துறையில் அவர் செய்த அதிபெரும் பங்களிப்புக்கு இந்திய அரசு ‘இந்திய நீர்ப்பாசனத் தந்தை’ என அங்கீகாரம் அளித்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் அவருக்கென 3,000 சிலைகள், அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவரது நினைவாக ஆண்டுதோறும் விழாக்கள் நடைபெறுகின்றன.

ஆனால், தமிழர்களுக்காக வேலை செய்தும், தமிழர்களிடம் தொழில்நுட்பம் கற்றும், தமிழகத்தில் அணைகளைக் கட்டியும், தமிழ்நாடு அரசும் மக்களும் அவரை பாராட்ட மறந்துவிட்டதாக வேதனையுடன் கூறுகின்றனர் விவசாயிகள். எனவே, ஆர்தர் காட்டனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து, பாடநூல்களில் அவரைப் பற்றி இடம் பெறச் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

Tags: Arthur Cottonbirthdayenglish scholarFather of Indian IrrigationRetro Special
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஜனாதிபதி திரௌபதி முர்முவின் 14 கேள்விகள் : உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு – ஸ்டாலின் கண்டனம்

Next Post

ஜி.பி.முத்து Vs ஊர் மக்கள் விவகாரம் : அதிகாரிகளின் முயற்சியால் சமாதானம் !

Related Posts

கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
News

கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

December 6, 2025
சோழவந்தான் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
News

சோழவந்தான் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

December 6, 2025
நாகூர் சுற்றுலாப் பயணிகளுக்கு அதானி அறக்கட்டளையின் உதவி
News

நாகூர் சுற்றுலாப் பயணிகளுக்கு அதானி அறக்கட்டளையின் உதவி

December 6, 2025
உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: கூத்தாநல்லூர் ‘மனோலயம்’ பள்ளியில் கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்றைய ராசிபலன் – ஜூன் 30, 2025 (திங்கக்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 15, 2025 (வெள்ளிக்கிழமை)

August 15, 2025
ஒரே படத்தில் கேமியோக்களின் மாபெரும் அணிவகுப்பு : ‘ஜெயிலர் 2’ அப்டேட்

ஒரே படத்தில் கேமியோக்களின் மாபெரும் அணிவகுப்பு : ‘ஜெயிலர் 2’ அப்டேட்

December 3, 2025
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
TVK செயற்குழு கூட்டம் : தேர்தல் பணிகள், சுற்றுப்பயணம், கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு !

விஜய்யின் 5 அஸ்திரங்கள் : டிசம்பர் வரை பக்கா ப்ளான் – தவெக செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள் !

July 4, 2025
கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

0
சோழவந்தான் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

சோழவந்தான் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

0
நாகூர் சுற்றுலாப் பயணிகளுக்கு அதானி அறக்கட்டளையின் உதவி

நாகூர் சுற்றுலாப் பயணிகளுக்கு அதானி அறக்கட்டளையின் உதவி

0
உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: கூத்தாநல்லூர் ‘மனோலயம்’ பள்ளியில் கொண்டாட்டம்

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: கூத்தாநல்லூர் ‘மனோலயம்’ பள்ளியில் கொண்டாட்டம்

0
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 07, 2025 (ஞாயிற்றுக்கிழமை)

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 07, 2025 (ஞாயிற்றுக்கிழமை)

December 7, 2025
கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

December 6, 2025
சோழவந்தான் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

சோழவந்தான் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

December 6, 2025
நாகூர் சுற்றுலாப் பயணிகளுக்கு அதானி அறக்கட்டளையின் உதவி

நாகூர் சுற்றுலாப் பயணிகளுக்கு அதானி அறக்கட்டளையின் உதவி

December 6, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.