டித்வா புயல் தொடர் மழை காரணமாக திருக்கடையூர் ஊராட்சியில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. நான்கு வழிச்சாலையால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு உரிய ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு டித்வா புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இந்த கனமழையால் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் பகுதியில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர் 500 ஏக்கர் மழைநீரில் மூழ்கியுள்ளது, புதிதாகப் அமைக்கப்பட்டு வரும் நான்குவழிச்சாலையின் இருபுறமும் உள்ள சம்பா நடவு நட்ட வயல்களில் கடந்த மூன்று தினங்களாகவே தண்ணீரில் மூழ்கியதால் பயிர்கள் அனைத்தும் சேதமாகி அழுகும் நிலையில் உள்ளது. நான்கு வழி சாலை அமைக்கும் போது முறையாக வடிகால் வசதிகளை ஏற்படுத்தவில்லை எனவும் குடமுறுட்டி வாய்க்கால் முறையாக தூர்வாராததால் விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்தது உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடனடியாக மழைநீர் வடிவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிககை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














