சென்னையில் நடைபெற்ற 600 கராத்தே மாணவர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட கராத்தே போட்டி நிகழ்ச்சி
சென்னை சாந்தோம் அருகாமையில் அமைந்துள்ள மான்போர்ட் தனியார் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் சென்னை டிஸ்ட்ரிக்ட் ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சார்பில் பிரம்மாண்ட கராத்தே போட்டி நடைபெற்றது இந்த கராத்தே போட்டியில் ஏழு வயது முதல் மூன்று பிரிவுகளின் கீழ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இந்த போட்டியானது இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் 600க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்
மாஸ்டர் ஈஸ்வரன். மாஸ்டர்ஜேக்கப் தேவகுமார். மாஸ்டர் அல்தாப் ஆலம் மற்றும் மாஸ்டர்பிரேம் ஆனந்த் ஆகியோர் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த கராத்தே போட்டியானது நடைபெற்றது
நிகழ்ச்சி நடுவே செய்தியாளர்கள் சந்தித்த பொழுது மாஸ்டர் அல்தாப் ஆலம் கூறுகையில் இந்த போட்டியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் இந்த போட்டியில் மூன்று பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்ச்சி செய்யப்படுவதாகவும் இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெற போட்டிகளில் கலந்து கொள்வர் அதன்பின் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் இன்டர்நேஷனல் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு போட்டியில் கலந்து இவர்கள் என்றும் கூறினார்














