- டில்லி குண்டு வெடிப்பு சம்பவம் மூலம் தனது இருப்பை உறுதிப்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் தெரிவித்தார்.
- 30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைப்பதில் உடனடி கவனம் செலுத்துவேன் என சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
- உலகளாவிய ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை தான் முக்கிய தூண்கள் என்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி20 மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- வரி விதிப்பு தொடர்பான வழக்கில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
- தமிழகம் வந்த பிரதமரை சந்திக்காமல், டில்லி செல்வேன் என்று முதல்வர் அரசியல் செய்வது எப்படி சரியாகும்,” என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
- இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதல்நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன் குவித்துள்ளது.
- நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 37 பேர் ஒரே நாளில் தங்களின் ஆயுத நடவடிக்கையை கை விட்டுவிட்டு, சரண் அடைந்துள்ளனர் என்று தெலுங்கானா டிஜிபி ஷிவாதர் ரெட்டி கூறி உள்ளார்.
- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கவாய் பணியாற்றிய காலத்தில், நீதிபதியாக நியமிப்பதற்கு செய்யப்பட்ட பரிந்துரைகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
- கர்நாடகாவின் பெங்களூருவில் வங்கி ஏடிஎம் வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளையடித்த சம்பவத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- வான்கூவரில் இருந்து டில்லி நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் வந்த பயணி, நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

















