October 12, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு : மத்திய அரசு அறிவிப்பு

by Priscilla
September 27, 2025
in News
A A
0
அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு : மத்திய அரசு அறிவிப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

அந்தமான் தீவுகளின் கிழக்குக் கரையில் இயற்கை எரிவாயு வளம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிசக்தி தேவைக்காக பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்றாக, ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு தேடலுக்கு மத்திய அரசு முனைந்துள்ளது. இதன் பகுதியாக, ஓ.என்.ஜி.சி நிறுவனம் அந்தமான் கடற்பகுதியில் ஆழ்துளையிடும் பணிகளை மேற்கொண்டது.

அதில், அந்தமான் தீவுகளின் கிழக்குக் கரையிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், 295 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விஜயபுரம் பகுதியில் உள்ள 2 ஆய்வுக் கிணற்றில் இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டது. 2,212 – 2,250 மீட்டர் ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டது.

அந்தக் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் கப்பல் மூலம் காக்கிநாடாவுக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அதில் 87 சதவீதம் மீத்தேன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, எரிவாயு களத்தின் அளவு மற்றும் வணிக ரீதியான சாத்தியங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் நடைபெறவுள்ளன. வடக்கே மியான்மர் முதல் தெற்கே இந்தோனேசியா வரையிலான கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன்கள் இருப்பதைப் போலவே, அந்தமான் படுகையிலும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பது முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.

குடியரசு தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஆழ்கடல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, எதிர்காலத்தில் உலகளாவிய ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்களுடன் (Petrobras, BP India, Shell, ExxonMobil) இணைந்து மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு வித்திடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு, நாட்டின் எரிசக்தி துறையில் ‘அம்ரித் கால்’ பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் எனவும் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

Tags: Andaman Seacentral governmentNatural gas discovery
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

”போர் முடிந்தவுடன் அதிபர் பதவியை விலகுவேன்” – உக்ரைன் தலைவர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

Next Post

இந்திய அணியின் நட்சத்திர வீரருக்கு காயம்.. ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாடுவாரா ?

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மரக்காணத்தில் மினிபஸ் ஓட்டுநர்களுக்கு மிரட்டல் ஆட்டோஓட்டுநர்கள் மீது நடவடிக்கைகோரி புகார்

September 30, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு அலையும் பெற்றோர்

September 24, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.