தமிழகத்தில் ஒரு பள்ளியை கூட தரம் உயர்த்த வில்லை… ஆனால் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என கூறிக் கொள்கிறார்.. தமிழக முதலமைச்சர்…”
நன்னிலம் வடக்கு ஒன்றிய பகுதிகளில் அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு..
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட நன்னிலம் வடக்கு ஒன்றிய பகுதிகளில்..அதிமுக பூத் கமிட்டி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வடக்கு ஒன்றிய பகுதிகளான.. வேலங்குடி, திருக்கொட்டாரம்,காளியாக்குடி, கடகம், தலையூர் பில்லூர் உள்ளிட்ட 25 ஊராட்சி பகுதிகளில் உள்ள 56 பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ்.. “தமிழகத்தில் ஒரு பள்ளியை கூட தரம் உயர்த்த வில்லை ஆனால் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விழா நடத்துகிறார் தமிழக முதலமைச்சர்.. இந்த ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை.. மக்கள் எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும் என விரும்புகின்றனர்.
மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பாலாஜி, நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சி பி ஜி அன்பு, தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அறிவொளி, தஞ்சை மண்டல இணைச் செயலாளர் சசிகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை மாவட்ட செயலாளர் விக்னேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
