திரையுலகில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கிடையே எப்போதும் நடிப்பு வாய்ப்புகளில் போட்டி நிலவினாலும், அவர்களிடையே பொறாமை இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக 1990-களில் தமிழும் தெலுங்கும் சேர்த்து தென்னிந்திய திரையுலகில் ஜொலித்த பிரபலங்கள் பலர் இன்று கூட நண்பர்களாகத் தொடர்ந்துவருகிறார்கள்.
இந்த நட்பின் அடையாளமாக, ஆண்டுதோறும் ஒரு முறை சந்தித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து மகிழும் நிகழ்வை நடத்தியுள்ளனர். இந்த ஆண்டின் நிகழ்ச்சி, கோவாவில் நடைபெற்றது.
இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், லிங்குசாமி, மோகன் ராஜா உள்ளிட்டோருடன், நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரபுதேவா, மேகா ஸ்ரீகாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமா சென், மகேஸ்வரி, சிவரஞ்சனி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பு, கடற்கரையை பின்னணியாகக் கொண்டு நடைபெற, நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பழைய நாட்களைப் போன்று சிரித்தும், பேசியும், நினைவுகளைப் பகிர்ந்தும் கொண்டாடினர். நிகழ்ச்சியின் போது நடிகைகள் மீனா, சங்கீதா, மகேஸ்வரி ஆகியோர் நடனமாடி மகிழ்ந்த காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன.
மேலும், இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைவரும் இணைந்து எடுத்த ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன.
இந்த சந்திப்பு, 90களின் நட்சத்திரங்களை ஒருங்கிணைக்கும் மாயாஜால நிகழ்வாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.