மும்பை : பாலிவுட் நடிகர் ஆமிர் கானின் வீட்டிற்கு கடந்த வாரம் ஒரு பெரிய பஸ் முழுக்க ஐபிஎஸ் அதிகாரிகள் வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இதற்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசிக்கும் நடிகர் ஆமிர் கானின் வீட்டிற்கு போலீஸ் வாகனங்கள் வரிசையாக வந்து செல்வது குறித்து வெளியான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. குறிப்பாக, ஒரு பஸ்ஸில் சுமார் 25 ஐபிஎஸ் அதிகாரிகள் வந்தனர். பின்னதாக மேலும் சில போலீஸ் வாகனங்களும் அந்த பகுதியை விட்டு சென்றது.
இந்த அபூர்வமான பாதுகாப்பு அணிவகுப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழும்பச் செய்தது. “ஏன் இத்தனை ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஆமிர் கானை சந்திக்க வேண்டியது?” என்ற யூகங்கள் வலுத்தன.
இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி, இது ஒரு ஓரியண்டேஷன் சந்திப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரி பயிற்சி பெறும் அதிகாரிகளுடன் ஒரு (motivational interaction) நிகழ்வை நடத்துவதற்காக, மத்திய அளவிலான ஏற்பாட்டின் கீழ் இந்த அதிகாரிகள் ஆமிர் கானை நேரில் சந்திக்க சென்றுள்ளனர். சமூக சிந்தனையுடன் பல்வேறு சமூக பிரச்சனைகளை திரைப்படங்களின் மூலம் எடுத்துக்காட்டியவர் என்பதாலேயே இவரை தேர்ந்தெடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இதனால் எந்தவிதமான ஆபத்து அல்லது விசாரணை இல்லை என்றும், இது முற்றிலும் திட்டமிட்ட நிகழ்ச்சி என்றும் அதிகார பூர்வ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.