மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் நரசிங்கநத்தம் கிராமம் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் 45 வயதுடைய மாற்றுத்திறனாளி அருள்முருகன் இவர் பிறவியிலிருந்து மாற்றுத்திறனாளியாக உள்ளார் இந்நிலையில் கடுமையான வறுமையில் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் அருள்முருகன் முழுவதும் மாற்றுத்திறனாளியாக உள்ள நிலையில் வெளியில் சென்றுவர முடியாத நிலை வேலைக்கு செல்ல முடியாத நிலை இப்படி இருக்க தனக்கு ஏற்படும் தினசரி இயற்கை உபாதைகளுக்கு கூட வெளியில் சென்று வர முடியாமல் தவித்து வந்துள்ளார். அவருக்கு உதவுவதற்கும் வாழ்வாதாரம் ஈட்டி தருவதற்கும் வழி கிடைக்காத நிலையில் தற்போது தனது நிலை குறித்து பெரம்பூரை சேர்ந்த சமூக சேவகர் பாரதி மோகன் என்பவருக்கு கோரிக்கை வைத்துள்ளார் .
உடனடியாக சமூக சேவகர் பாரதிமோகன் மாற்றுத்திறனாளியான அருள் முருகனுக்கு உதவ வேண்டும் என நினைத்து அவர் வெளியில் சென்று வருவதற்கும் தனக்கு ஏற்படும் இயற்கை உபாதைகளுக்கு வெளியில் செல்வதற்கும் மற்ற இடங்களுக்கு தானே சென்று வரும் நிலையில் அருள் முருகனுக்கு சமூக சேவகர் பாரதி மோகன் தனது அறக்கட்டளை மூலம் மூன்று சக்கர சைக்கிள் வாங்கி வழங்கி உள்ளார் நேரடியாக அருள்முருகன் கிராமத்திற்கு சென்று சமூக சேவகர் பாரதி மோகன் மூன்று சக்கர சைக்கிளை அருள் முருகனிடம் வழங்கினார் அப்பொழுது அருள் முருகன் தனக்கு கடவுள் போல வந்து உதவி உள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்
அப்பொழுது ஊர் முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் பலர் இதனை விழா போல கொண்டாடினர் சமூக சேவகர் பாரதி மோகனுக்கு மாலை அணிவித்து சால்வை அணிவித்து தங்கள் நன்றிகளை தெரிவித்தனர் மூன்று சக்கர சைக்கிளை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளி அருள் முருகன் மூன்று சக்கர சைக்கிளில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சியுடன் அதனை ஓட்டி சென்றார்.