மயிலாடுதுறை மாவட்டத்தில் 5,239 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது பருத்தியை அறுவடை தீவிரமாக நடைபெற்று, விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறையில்ல் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில், 275 விவசாயிகள் 800 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் மற்றும் ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள் மற்றும் மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர். பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.7,509-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.7,069-க்கும், சராசரி விலையாக ரூ.7,425-க்கும் விலை போனது. ரூ.60 லட்சத்துக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.
