யூடியூபர் இலக்கியா தற்கொலை முயற்சி ? – மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதி

பிரபல யூடியூபராக இருக்கும் இலக்கியா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் வசிக்கும் இலக்கியா, நேற்று நள்ளிரவு திடீரென உடல்நலக்குறைவால் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார். மேலும், அவர் மது போதையிலும் இருந்ததாக தெரிகிறது,” என தெரிவித்தனர்.

அந்நிலையில், மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றத் தீர்மானிக்கப்பட்ட நிலையில், இலக்கியாவுடன் இருந்த நபர் அவரை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர், இலக்கியா வீடு திரும்பியுள்ளார்.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். “இது தற்கொலை முயற்சியா அல்லது ஏதேனும் உடல்நலக் கோளாறா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இலக்கியா தரப்பில் எந்தவிதமான புகாரும் அளிக்கப்படவில்லை என்பதால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என போலீசார் தெரிவித்தனர்.

Exit mobile version