மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் இன்று மகளிர் தின விழா கொண்டாட்டம்.
மகளிர் தினத்தை முன்னிட்டு, 8-ந்தேதி அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.
அதே சமயம், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் இன்று (7-ந்தேதி) மாலை 3 மணியளவில் மாமல்லபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளார்கள் இந்த விழாவில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டு இல்லாத கட்சியினரும், மக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறும் கூட்டத்திற்கு வருகை தர இருக்கிறார்
இதற்காக விஜய் வருகை முன்னிட்டு அங்கு பேனர் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன தமிழகத்திலிருந்து தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு உள்ளார்கள் மேலும் மகளிர் தினம் என்பதால் மகளிர் காண சில முக்கிய அறிவிப்புகள் உள்ளது














