விழுப்புரத்தில் அதிமுக வடக்கு நகர மகளிர் அணி சார்பில் மகளிர் தினக் கொண்டாட்டம்
பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விழுப்புரம் வடக்கு நகர அதிமுக மகளிர் அணி சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நகர மகளிர் அணி செயலாளர் பத்மபிரியா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெண்கள் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர். தொடர்ந்து பெண்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், சேலை, பிளாஸ்டிக் பக்கெட், இனிப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராமதாஸ், அம்மா பேரவை மாநில இணை செயலாளர் சங்கர், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், வழக்கறிஞர்கள் பிரிவு ராதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பல பெண்கள் கலந்து கொண்டு மகளிர் தினத்தை உற்சாகமாகக் கொண்டாடினர்.வளர்மதி அண்ணாமலை ஏசுமதி சித்ரா அம்சவல்லி மீனா கீதா பாக்கியலட்சுமி சுமதி
