தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்க ளின் நல்லாசியுடன்,
கழக பொது செயலாளர் அவர்களின் வழிகாட்டு தலின்படி, தவெக வினர் தமிழகம் எங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று பகல் மாதவரம் தபால் பெட்டி அருகில் பசியில்லா மாதவரம் திட்டம் துவக்கப்பட்டது.
திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் கழக செயலாளர் வழக்கறிஞர் M.L.பிரபு அவர்கள் தலைமையில் பசியில்லா மாதவரம் திட்டம் இன்று மாதவரம் தபால் பெட்டி அருகில் துவக்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் தவெக வினர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விலையில்லா உணவு வழங்க உள்ளனர்.
இன்று சுமார் 1000 பேர்களுக்கு பிரியாணி மற்றும் புடவை தண்ணீர் குடம் வழங்கப்பட்டது திருவள்ளூர் தென் மேற்கு மாவட்டம் கழக செயலாளர் வழக்கறிஞர் M.L.பிரபு அவர்கள் பிரியாணி வழங்கினார்..
இதில் தவெக மாவட்ட, பகுதி,ஒன்றியம்,நகரம், வட்டம், ஊராட்சி, மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
