திருவாரூரில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீத வரி உயர்வு என்பதை நடப்பாண்டில் எவ்வித வரி உயர்வும் கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளதுடன் ஏற்கனவே உள்ள வரியை மட்டும் தான் வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்படி பழைய நடைமுறையில் உள்ளவாறு தான் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. வீட்டு வரி உள்ளிட்ட எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. இது குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.