உத்தரப்பிரதேசத்திலுள்ள Prayagraj நகரில், கேப்டன் நிஷாதுக்கும் (26) சித்தாரா என்னும் பெண்ணுக்கும் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
முதலிரவு அறைக்குள் வந்த சித்தாரா, அறையின் ஒரு மூலையில் போய் அமர்ந்துகொண்டார். முகத்தை மறைக்கும் முக்காட்டுக்கு அடியில் அவர் ஒரு பெரிய கத்தி வைத்திருந்தார். என்னைத் தொட்டால் உன்னை 35 துண்டுகளாக வெட்டுவிடுவேன்,என் உடல் அமானுக்குத்தான் சொந்தம் என்று சித்தாரா கூற, அதிர்ச்சி அடைந்தார் நிஷாத்.
பயமும் அவமானமுமாக இதே விடயம் தினமும் தொடர, வரவேற்பு நிகழ்ச்சியிலும், நடந்ததை யாரிடமும் சொல்லவில்லை நிஷாத்.ஆனால், அதற்குப் பின்பும் தினமும் நள்ளிரவு வரை கையில் கத்தியுடன் சித்தாரா உட்கார்ந்திருந்தார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, தன் பெற்றோரிடம் இந்த காரியத்தை சொல்லியிருக்கிறார் நிஷாத். அவர்கள் சித்தாராவிடம் விசாரிக்க, தான் அமான் என்பவரை காதலிப்பதாகவும், தன்னைக் கட்டாயப்படுத்தி தன் பெற்றோர் திருமணம் செய்துவைத்து விட்டதாகவும் சித்தாரா கூறியதுடன், எனக்கு முதலிரவு என்று ஒன்று நடந்தால் அது அமானுடன் தான் என்றும் கூறியிருக்கிறார்.
நிஷாதின் பெற்றோர், சித்தாராவின் பெற்றோரிடம் கூற, பெரியவர்கள் பலர் கூடி, காதலனை மறந்து நிஷாதுடன் வாழ சித்தாராவை வற்புறுத்தியதுடன், தான் அதற்கு சம்மதிப்பதாக சித்தாராவை எழுதிக்கொடுக்கவும் வைத்துள்ளார்கள்.
ஆனால், மே மாதம் 30ஆம் தேதி வீட்டின் பின்பக்கச் சுவரைத் தாண்டிக் குதித்து தப்பியோடிவிட்டார் சித்தாரா.
நேராக அவர் தன் காதலனான அமான் வீட்டுக்கே சென்றுவிட, மனைவி விட்டுப்போன அவமானத்துடன், போலீஸ் விசாரணையும் சேர்ந்துகொள்ள, தலைகுனிவுடன் வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளது நிஷாத் குடும்பம்.