சீர்காழியில் மனைவி நல வேட்பு விழா,காதலை வெளிப்படுத்திய தம்பதிகள் -பிள்ளைகள்,பேரக் குழந்தைகள் நேரில் பார்த்து மகிழ்ந்த தருணங்கள்
கணவன் – மனைவி இடையே புரிதல் இல்லாததால் குடும்ப வாழ்கை சண்டை சச்சரவுகளை தொடர்ந்து நீதிமன்ற வரை செல்லுவதை தடுத்த அருமையான நிகழ்வுகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடந்த மனைவின் உறவு மேம்பாடு அடைவதற்கு மனைவி நல விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கணவன் – மனைவி உறவுகள் மேம்பாடு அடைவதற்கும் குடும்பங்களில் இன்னல்கள் தீர்வதற்கும் வழி வகுக்கும் வகையில் இந்நிகழ்வில் சிறப்பாக தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும் குடும்பத்தை நல்வழியில் கொண்டு செல்லும் மனைவிக்கு,கணவன் மார்கள் மாலை போட்டு விட்டும் அதே போல மனைவி மார்கள் கணவனுக்கு மாலை போட்டும் உறவுகள் ஒற்றுமையாக வாழ்கை எளிதாக கடந்து செல்ல அன்பை பரிமாறி கொண்டனர், இதில் கணவர்கள், மனைவிக்கு மலர் கொடுத்து மலர் போல மென்மையான வாழ்கையை கடந்து செல்ல வேண்டும் என மலர் கொடுத்தும்,அதே போல மனைவிகள்,கணவனுக்கு கனி கொடுத்து கனிவாக நடந்து கொள்வதாகவும் உறுதி மொழி கூறி கொண்டனர்,தற்போதைய சூழ்நிலையில் திருமணம் நடந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் சண்டை போட்டு மறு மாதமே நீதிமன்றத்தை நாடி எளிதாக பிரிந்து செல்ல கூடிய தம்பிகள் தான் அதிகரித்து வருகின்றனர் இதனை மாற்றும் விதமாக இவ்விழா நடைபெற்றது, இதில் இளைய வயது முதல் மூத்த வயது உடைய 50 தம்பிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பிள்ளைகள் அனைவரும் கலந்துகொண்டு தாய்,தந்தை இருவரின் உறவுகள் எவ்வாறு மேம்பாடு அடைந்துள்ளது என இந்நிகழ்வை நேரில் பார்த்து ஆச்சரியம் அடைந்து மகிழ்ச்சி அடைந்தனர்.


















