தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பாக தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திருக்கடையூர் பொறையார், அனந்தமங்கலம், தில்லையாடி, செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது கடந்த இரண்டு நாட்களாக தூரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது மிதமான மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மேலும் பல்வேறு பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேலும் மழை நீடித்தால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடையும் நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

















