புதிய போப் ஆகும் வாய்ப்பு யாருக்கு?

போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து புதிய போப் யார் என்று கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது . இந்நிலையில் புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க தொடங்கி உள்ளது. 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்கலாம். 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் ஒன்றுகூடி ரகசியமாக நடத்தும் ஓட்டெடுப்பில், மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறும் நபர், அடுத்த போப் ஆக தேர்வு செய்யப்படுவார்.

வாடிகனில் உள்ள தேவாலயத்தின் புகைபோக்கியிலிருந்து வெள்ளைப் புகை வெளியேறும்படி ரசாயனங்களைப் பயன்படுத்தி காகித வாக்குச் சீட்டுகளை எரிக்கும்போது. புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்த உலகம் அறியும் .

இதன் பிறகு புதிய போப் தோன்றி சதுக்கத்தில் உள்ள கூட்டத்தினருக்கு அவரது ஆசீர்வாதத்தை அளிப்பார்.
இந்நிலையில் புதிய போப் ரேஸில் இருப்பவர்களின் பெயர் வெளியாகி உள்ளது.

    Exit mobile version