திடீரென நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு என்ன ஆனது?.. கவலையில் ரசிகர்கள்!

மீடியா துறையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய ப்ரியா பவானி ஷங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்களின் பெரும் கவனத்தை பெற்றவர். அதன்பின் வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தின் மூலம் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் அவர் நடித்து, தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில், சில படங்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தாலும், சமீபத்தில் வெளியான டிமாண்டி காலனி 2 படம் அவருக்கு மீண்டும் வெற்றியை அளித்தது.

இத்தனை வெற்றிகளுக்குப் பிறகு, கடந்த சில மாதங்களாக ப்ரியாவை எந்தப் படத்திலும் காணமுடியவில்லை. மேலும், தனது சமூக வலைதள பக்கத்திலும் மிகக் குறைவாகவே இடுகைகள் பகிர்ந்துள்ளார். இதனால், “ப்ரியா பவானி ஷங்கருக்கு என்ன ஆனது?” என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கவலையுடன் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் தனது காதலன் ராஜவேலை சந்திக்க ஆஸ்திரேலியா சென்றிருந்ததாகவும், அங்கு சில மாதங்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் மீண்டும் சென்னை திரும்பியுள்ள நிலையில், அடுத்தடுத்த புதிய படங்களில் கமிட்டாவார் என திரையுலகத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Exit mobile version