பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மேற்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கனிமொழி பேசியது போல் இளம் விதவைகள் உருவாக்க காரணமான மதுக்கடைகளை அவரின் அண்ணனிடம் கூறி மூட நடவடிக்கை எடுக்காதது ஏன்
அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சின்னதுரை பேட்டி
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில்
மேற்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் மகளிர் அணி செயலாளர் கிளாடிஸ் லில்லி தலைமையில் , மாவட்ட செயலாளர் ஜெய சுதர்சன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சின்னதுரை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் பாலியல் சீண்டல்,பெண்களுக்கு எதிரான எந்த கொடுமையும் நடக்கவில்லை.
அனைத்தையும் இரும்பு கரம் கொண்டு அடக்கி வந்தார். அதிலும் அன்று இருந்த காவல்துறை வேறு , இன்று உள்ள காவல் துறை வேறு.
கேரளாவிற்கு கன்னியாகுமரி உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது . ஆனால் உள்ளூரில் கனிமவள தட்டுபாடு ஏற்படுள்ளது. இதனால் பல கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது அமைச்சர் மனோதங்கராஜ் கனிமவள கடத்தலுக்கு துணை போகிறார் .அதற்கு எதிராக அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
திமுக ஆட்சி மோசமான ஆட்சி, சட்டம் ஒழுங்கு சீர் கேடு, கொலை , கொள்ளை எல்லாம் நடக்கிறது . கடந்த ஆட்சியில் பெண் விதவைகள் உருவாக மதுபான கடைகள் காரணமாக உள்ளதாக பேசியவர் கனி மொழி. அவர் தனது அண்ணனிடம் பேசி மதுக்கடைகளை அடைக்க ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.
மதுபான ஆலைகளை அனைத்தும் நடத்துவது திமுக தான். அதனால் அவர்களால் அதை தடை செய்ய முடியாது
பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் அதன் பிறகு தான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். பாதுகாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
















