வார் 2 படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் அவரது முதல் படத்தை நடித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார்.

திரைப்படம் மிகவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் ருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டிரெய்லர் வரும் ஜூலை 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது

Exit mobile version