எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என விழுப்புரத்தில் நடந்த திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்
லட்சுமணன் ஆவேசம்*
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ தலைமையேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
அப்போது அவர் கூட்டத்தில் பேசுகையில்:
விழுப்புரம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தாவேகத் தலைவர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் பஸ்ஸில் பயணம் செய்து அரசியல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில், நமது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை, இதுவரை நடத்தப்பட்ட கூட்டங்களை விட மிகப்பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதில் கலந்து கொள்பவர்களின் வெள்ளம், எதிர்க்கட்சியின் நிகழ்வுகளை மிஞ்சும் வகையில் இருக்க வேண்டும்.
வரவிருக்கும் 2026 சட்டசபைத் தேர்தலில் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமையும். அதற்காக அடித்தட்டு மக்களின் வெற்றியை உறுதி செய்வதற்கு, விழுப்புரம் மற்றும் வானூர் தொகுதிகளில் வெற்றி பெறுவது மிக முக்கியம். முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் நமது வலிமையை நிரூபிக்கும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும்.
அதற்காக, நிர்வாகிகள் இப்போதே உறுதுணையாக இருந்து வெற்றிக்காக பாடுபட துவங்க வேண்டும்,” என லட்சுமணன் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் விழுப்புரம் மற்றும் வானூர் தொகுதி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.