கூறை வீட்டில் வசித்து படித்து அரசு ஒதிக்கீட்டில் சீட் கிடைத்த நிலையில் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கிறார் என்று நிலையில் மருத்துவ மாணவியின் விடுதி கட்டணத்தை செலுத்திய விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன்
விழுப்புரம் மாவட்டம் வானூரில் கூறை வீட்டில் வசித்து வரும் லாரி ஓட்டுனர் மாணிக்கம் என்பவரின் மகள் ஷீலா என்ற மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அரசு ஒதிக்கீட்டில் சீட் எம்.பி.பி.எஸ் கிடைத்துள்ளது. அவருக்கு விடுதியில் தங்குவதற்கு போதிய கட்டணம் செலுத்த பணம் இல்லை, குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார் அவர்க்கு அரசு உதவ முன்வரவேண்டும் என மாணவியின் இந்நிலையில் இதனை கண்ட விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான டாக்டர் லட்சுமணன், இன்று மாணவியின் வீட்டுக்கு சென்று மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறி, விடுதி கட்டணமான ரூ.50,000 பணத்தை அவர் குடும்ப உறுப்பினரும் வழங்கினார்
மேலும் குடிசை வீடு அரசு சார்பில் கான்கிரீட் வீடாக கட்டித்தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் மாணவிக்கு தேவையான உதவிகளையும் செய்து தருவதாக மாணவி பெற்றோரிடம் எம் எல் ஏ தெரிவித்தார்
















