விழுப்புரம் நகரப்பகுதியான காமராஜ் சாலை மற்றும் தமிரகுளத்தில் விழுப்புரம் நகர வடக்கு மற்றும் தெற்கு அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம் நகர செயலாளர் பசுபதி,ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றனர். அப்போது அவர் மேடையில் பேசுகையில்: மக்களுக்கு அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த பல திட்டங்களை ஆட்சிக்கு வந்த திமுக அரசு நிறுத்தி மக்களை அரசே கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறது.
தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் கொடுப்போம் என்றார்கள் ஆனால் 25 மாதங்கள் கழித்து தகுதியானவர்களுக்கு மட்டும் கூறினார்கள் தற்போது தேர்தல் வரவுள்ள நிலையில் மேலும் சிலருக்கு தருவோம் என ஏமாற்றுகிறார்கள்.
போலீஸ் சீருடையில் இருக்கும் பெண்ணிற்கு திமுகவினர் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள் அவர்களை திமுக அரசு பாதுகாக்கிறது இவ்வாறாக ஆட்சி செய்கிறார்கள்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர் திமுகவினர் ,இவ்வளவு நாள் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களிடம் ஸ்டாலின் இதுவரை இருந்து விட்டு இப்போது உங்களுடன் ஸ்டாலின் என மக்களிடையே வருகிறார்.
2011 – 2016 திமுக ஆட்சியில் தொடர் மின்வெட்டு இருந்து வந்தது அதனை அடுத்து ஆட்சிக்கு வந்த அம்மா ஆறு மாத காலங்களில் மின்வெட்டை சரிசெய்து மற்ற மாநிலத்திற்கு மின்சாரம் வழங்கும் மிகை மாநிலமாக மாற்றியவர் அம்மா என கூறினார்
















