மயிலாடுதுறை அருகே கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பனநுங்கின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது:-
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் வேளையில், தாகம் தணிக்கவும், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் செயற்கையான குளிர்பானங்களுக்குப் பதிலாக, பாரம்பரிய மற்றும் இயற்கையான உணவுகளை மக்கள் தேடிச் செல்கின்றனர். இப்படி பட்ட சூழலில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த குட்டிஸ்கள், வெயிலிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஒரு வித்தியாசமான மற்றும் சுவையான வழியைக் கண்டறிந்துள்ளனர்.
கடைகளில் விற்கப்படும் ரசாயன ஐஸ்கிரீம்கள் மற்றும் குளிர்பானங்களுக்கு பதிலாக, பெற்றோர்கள் வாங்கி வந்து கொடுத்த பனைமரங்களில் விளைந்த இயற்கையான நுங்குகளை குட்டீஸ்கள் உற்சாகமாகச் சாப்பிட்டு வருகிறார்கள். இந்தப் பாரம்பரிய உணவு, உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு, எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாதது என்பதால் குட்டிஸ்கள் தரையில் அமர்ந்து, மகிழ்ச்சியுடன் ருசித்து பன நுங்கு பகிர்ந்து சாப்பிட்டு வருகின்றனர். இதை பெற்றோர்கள் வீடியோவாக எடுத்து இன்றைய சிறுவர்களுக்கு நமது பாரம்பரிய குளிர்ச்சி நிறைந்த பனைநொங்கை சாப்பிட ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.














