மாதவரம் தனியார் கல்லூரியில் போலீசார் நடத்திய விழிப்புணர்வு

தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் உத்தரவின் பேரில் புழல் சரக உதவி ஆணையாளர் சத்யன் ஆலோசனையில், மாதவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூபாலன் தலைமையில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவல் துறை சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் , பெண்கள் பாதுகாப்பு, , மாணவிகள் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் நிகழாமல் தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் , போக்சோ சட்ட விதிமுறைகள், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் படிப்பில் கவனம் செலுத்தி சமுதாயத்தில் சிறந்த மாணவராக திகழவும் தீய பழக்கங்களிலிந்து விடுபடவும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பெற்றோர்களின் அன்பை பெற்று வாழ்வில் மென்மேலும் சாதனைகள் புரியவும் படித்து முடித்து உயர் பதவிகள் வகிக்க ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மேலும் காவல் s.o. s. செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து காவல் துறை தங்களுக்கு எவ்வாறு உதவிகள் செய்யும் என செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் மாதவரம் காவல் நிலைய உதவி இன்ஸ்பெக்டர் வடிவேலு மற்றும் கேர் அன்ட் வெல்பேர் தொண்டு நிறுவனம், காவல் நிலைய போலீசார்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பித்தனர். இதில் கல்லூரி ஆசிரியர் , ஆசிரியைகள் மாணவ மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version