மன்னார்குடி அருகே மேலமறவாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு -வின் முப்பாட்டனார் அவருக்கு சொந்தமான தோட்டத்தினை தற்போது கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் ஆனந்தன் என்பவருடைய முப்பாட்டனாருக்கு அனுபவமாக கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது . 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆனந்தின் , பாட்டனார் , தந்தை என வீட்டு வரியை தொடர்ந்து கிராமத்திற்கு கட்டி வந்த நிலையில் . ரமேஷ் பாபு விற்கு சொந்த இடத்தை ஆனந்தன் என்பவருக்கு எழுதி வைத்துவிட்டு குடும்பத்துடன் தஞ்சாவூரில் வசித்து வருகிறார் . இந்த நிலையில் மேலமறவாக்காடு கிராமத்தை சேர்ந்த ஜோதிராமலிங்கம் , கிருஷ்ணசாமி , சிவராஜ் , கோபு , ராமதுரை , சின்னப்பா உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்டோர் ரமேஷ் பாபுவிடம் இடத்தை வாங்கியதாக கூறி ஆனந்தன் இந்த பகுதியில் இருக்க கூடாது என்று வீட்டில் வெளியே உள்ள கம்பி வேலியை , இரும்பு கதவுகளை அடித்து நொறுக்கி உள்ளனர் இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது . இது குறித்து இடத்தின் உரிமையாளர் ரமேஷ் பாபுவிடம் கேட்டதற்கு எனது சொந்த இடத்தை ஆனந்தன் , முத்தமிழ்செல்வி ஆகியோருக்கு கொடுத்து விட்டதாகவும் அவர்கள் நீண்டவருடங்கலாக அந்த வீட்டில் வசித்து வருகிறார்கள் இந்த இடத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் செய்த செயலுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறினார் . தொடர்ந்து ஆனந்தன் , முத்தமிழ்செல்வி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து முத்தமிழ்செல்வி மீது மண்ணணெய் ஊற்றியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் . தகவல் அறிந்து வந்த மன்னார்குடி காவல்துறையினர் விசாரணை செய்தபோது காவல்துறையினரையே சில நபர்கள் மிரட்டி பேச்சுவார்த்தை நடத்த விடாமல் செய்துவிட்டனர் . ஆனந்தன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் வருகிறதாக குற்றம் சாட்டுகின்றனர் .


















