புதுடில்லி: தமிழகத்தில் பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக போலீஸ் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றிய சங்கர் ஜிவால், நேற்று ஓய்வு பெற்றார். அவரின் ஓய்வுக்குப் பின், நிர்வாக பிரிவு டிஜிபியாக இருந்த ஜி. வெங்கட்ராமனை, தமிழக அரசு பொறுப்பு டிஜிபியாக நியமித்தது.
இந்நிலையில், பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பின் ஹென்றி திபேன், இந்த நியமனத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
டிஜிபி நியமனத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
டிஜிபி பதவிக்காலம் நிறைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு (UPSC) தகுதியானவர்களின் பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட வேண்டியது அவசியம்.
ஆனால், தமிழக அரசு பட்டியல் அனுப்பாதது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.
இதனால், நீதிமன்ற உத்தரவை மீறி, பொறுப்பு டிஜிபியை நியமித்துள்ளது.
இவ்வாறு ஹென்றி திபேன் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
















