கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

மயிலாடுதுறை
கூறைநாட்டில்
உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கிய கடை மேற்பார்வையாளர் விற்பனையாளர் கைது. டாஸ்மாக் கடை மூடல்:-

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்தது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் பணம் வாங்குபவர்களின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 டாஸ்மாக் கடை ஊழியர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மார்க் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக சட்டத்திற்கு புறம்பாக வாங்குவதாக மயிலாடுதுறை டவுண்டேஷன் பகுதியைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவர் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை போலீசார் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் ஆகிய இருவரை கைது செய்தனர். இதனால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் காவல் நிலைய பினையில் விடுவித்தனர். சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version