மயிலாடுதுறை அருகே அரங்கக்குடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை. மறைந்த முன்னோர்களுக்கு துவா செய்து வழிபாடு:- குழு புகைப்படம் எடுத்தும், ஒருவருக்கொருவர் கட்டி ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர் :-
இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரித் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அரங்கக்குடியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு வாழ்வில் வளமோடு ஒற்றுமை உணர்வோடு சிறப்புற்று வாழவும் உலகில் அன்பும் அறமும் மனிதநேயமும் தழைத்தோங்கவும் இமாம் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் சிறப்புத் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்து முன்னோர்களுக்கு துவா செய்தனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் கட்டி ஆரத்தழுவியும், குழுப் புகைப்படங்கள் எடுத்தும் தங்களது பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதேபோல் வடகரை, குத்தாலம், தேரிழந்தூர், ஆயப்பாடி, திருவாளபுத்தூர், திருக்களாச்சேரி, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.












