வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகம்

நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகை மட்டுமல்லாமல் இயக்குனராகவும் களமிறங்க தயாராக உள்ளார். சிம்புவுடன் நடித்த போடா போடி மூலம் அறிமுகமான இவர், தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டைக் கோழி 2, சர்க்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் ஹனுமேன், வீரசிம்ஹா ரெட்டி போன்ற படங்களில் நடித்துவரும் இவர், ரசிகர்களிடையே பெயர் பெற்றவர்.

வரலட்சுமி இயக்கும் முதல் படம் சரஸ்வதி. இதில் வரலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் போது பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா போன்ற பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.

வரலட்சுமி மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, முதலாவது தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளனர். இப்படத்தில் தமன் இசை, A.M.எட்வின் சகாய் ஒளிப்பதிவு, வெங்கட் ராஜன் படத் தொகுப்பு, சுதீர் மச்சர்லா கலை இயக்கம் என தொழில்நுட்ப குழுவும் பணியாற்றியுள்ளனர்.

Exit mobile version