ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் வேன் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தோடா மாவட்டத்தில் உள்ள பாரத்-பாக்லா சாலையில் இன்று காலை வேன் ஒன்று அசுர வேகத்தில் பயணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வாகனத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். எதிர்பாராதவிதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால், வேன் பள்ளத்தாக்கில் பாய்ந்து கவிழ்ந்தது.
விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மற்ற பயணிகள் பலர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மீட்புக்குழுவினரால் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணமாக அதிகவேகமும், டிரைவரின் கவனக்குறையும் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.