உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்:-
உலக பட்டினி தினமான இன்று தமிழக வெற்றி கழகத்தினர் பொதுமக்களுக்கு உணவு வழங்க வேண்டும் எனக் கட்சி தலைமை அறிவுறுத்தி இருந்தது. அந்த வகையில் மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தினர் பொதுமக்களுக்கு இன்று மதிய உணவு வழங்கினர். தாகா நகர செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கோபிநாத் பங்கேற்று பொதுமக்களுக்கு அறுசுவை உணவினை வழங்கினார். எதிர்க்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
