திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியTVKதினர்

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு வீடு தேடி சென்று நிவாரண பொருட்களை வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்..

டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பெய்த மழை காரணமாக திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டை சேர்ந்த ஐநூற்று பிள்ளையார் கோவில் தெற்கு தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் உட்பகுந்துள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அப்பகுதி மக்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் இப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று, அவர்களுக்கு தேவையான பால், ரொட்டி,மாவு பாக்கெட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர். மேலும் அனைத்து வீடுகளிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினர். தொடர்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த மக்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு அரசு அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தனர். ஒவ்வொரு முறையும் மழையால் பாதிக்கப்படும் தங்களை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள் மத்தியில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரணம் வழங்கியதற்கு ஐநூற்று பிள்ளையார் கோவில் தெற்கு தெரு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக திருவாரூர் நகர பொறுப்பாளர் ஆதிநாதன் சுந்தர் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள் சங்கர் மற்றும் பரதர் மற்றும் 27 வது வார்டு பொறுப்பாளர்கள், நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேட்டி : ஆதிநாதன் சுந்தர் மற்றும் சங்கர் – தவெக நிர்வாகிகள்

Exit mobile version