முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பலன் தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
முத்தமிழறிஞர், முன்னாள் முதல்வர், முன்னாள் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு திருவாரூரில் நடைபெற்றது.
எல் நினோ தாக்கத்தினால் தமிழகம் முழுவதும் கடும் வெப்பம் வாட்டி வதைக்கும் சூழலில், பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், சுற்றுச்சூழல் மேம்படுத்தும் எண்ணத்தோடு திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நெல்லி, வேம்பு, மகிழம், புங்கை உள்ளிட்ட நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.
திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தினேஷ்குமார் ஏற்பாட்டில், திருவாரூர் அருகே விளமல் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கலைவாணன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக திருவாரூர் ஒன்றிய செயலாளர் தேவா, சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் மீனாட்சி சூரியபிரகாஷ், மாவட்ட தலைவர் காசிராஜன், நகர ஒன்றிய அமைப்பாளர்கள் வரதராஜன் மற்றும் தாய் வீடு செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














