- கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன், காங்கிரஸ் எம்பி ராகுல் பேசி உள்ளார்.
- நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்.
- எந்த அரசியல் கூட்டமா இருந்தாலும் இனிமே ஒரு கண்ட்ரோல் வேண்டும் என்று கரூர் கூட்ட நெரிசலில் 2 மகள்களை இழந்த தந்தை பெருமாள் வேதனையுடன் தெரிவித்தார்.
- கரூரில் 40 பேரை பலிகொண்ட துயர சம்பவம் தமிழகத்திற்கு ஒரு கருப்பு நாள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறி உள்ளார்.
- கரூரில் 40 பேர் பலியான .நடிகர் விஜய்யின் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு கலெக்டர், போலீஸ் எஸ்பி இருவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
- கரூரில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் பிரசாரத்திற்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை விட, தவெக தலைவர் விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
- கரூர் சம்பவத்தில் யாரும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இன்னும் கூடுதலாக நிதி உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் முன் வர வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
- சுதேசி பொருட்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 17 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த புகாரில், சாமியார் சைதன்யானந்தாவை ஆக்ராவில் கைது செய்யப்பட்டார் என டில்லி போலீசார் தெரிவித்தனர்.
- உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக எங்கள் அண்டை நாடு உள்ளது. பல தசாப்தங்களாக, முக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் அந்த ஒரு நாட்டிலிருந்துதான் வருகின்றன. என ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானை கடுமையாக சாடி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.