- பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் ஜப்பான் பயணம் இந்தியா மற்றும் ஜப்பான் இடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
- சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஜனாதிபதி, கவர்னர்கள் முடிவெடுக்கும் விவகாரத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகள் வழக்கு தொடர முடியாது என, மத்திய அரசு வாதிட்டு உள்ளது.
- கச்சத் தீவு, இலங்கைக்கு சொந்தமானது. தமிழகத்தில் தேர்தல் நேரங்களில், கச்சத்தீவு பற்றி பேசுவதை, அரசியல் தலைவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர், என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார்.
- கனடாவுடன் உறவுகள் சீர்பட்டு வரும் நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு அந்த நாட்டுக்கான இந்திய துாதரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. 1990ம் ஆண்டு ஐ.எப்.எஸ். அதிகாரியான தினேஷ் பட்நாயக் துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.
- ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நாளையே இந்திய பொருள்களுக்கான வரி 25% குறைக்கப்படும் என வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசுடன் எந்த மோதலும் இல்லை. நல்ல உறவு உள்ளது. பாஜவுக்காக நாங்கள் எந்த முடிவும் எடுப்பது இல்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
- சுதந்திரத்திற்கு பின்னர் உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் ஹிந்து மக்கள் தொகை, 15 சதவீதம் சரிவை கண்டுள்ளதாக, 2024- சம்பல் வன்முறை குறித்த குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததற்கு அமெரிக்க பார்லிமென்டின் வெளியுறவு கொள்கைக்கான குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அமெரிக்கர்களையே பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.
- 2038ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 29 August 2025 | Retro tamil
